ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல்!

  அனிதா   | Last Modified : 23 Oct, 2019 12:11 pm
p-chidambram-has-moved-a-bail-plea-in-delhi-high-court

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் கடந்த ஆக 21ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டு செப்.5 ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். 

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் வைத்துள்ளது. அமலாக்கத்துறை காவல் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். 

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கதுறை பதிவு செய்துள்ள வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். 

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close