பெண்களுக்கு மசூதிகளில் அனுமதி உண்டா?? மத்திய அரசிடம் கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம்!!

  அபிநயா   | Last Modified : 25 Oct, 2019 07:22 pm
sc-seeks-centre-s-response-on-plea-for-entry-of-muslim-women-into-mosquessc-seeks-centre-s-response-on-plea-for-entry-of-muslim-women-into-mosques

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து,  மசூதிகளுக்குள்ளும் பெண்களை அனுமதிக்கக் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, அதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்று வழிபட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பெண்கள் சபரிமலைக்கு செல்ல கேரள அரசு அனுமதி வழங்கியது. 

இதை தொடர்ந்து, முஸ்லிம் இன பெண்களும் மசூதிகளுக்குள் நுழைய அனுமதிக்கோரி உச்ச நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தாக்கல் செய்யதிருந்தார் யாஸ்மீன் சுபெர் அஹமது.

இவரின் இந்த மனு குறித்து விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இதற்கு பதிலளிக்குமாறு மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close