ராமர் கோவில் கட்டுமானம் டிசம்பரில் தொடங்கும் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்னரே சாக்ஷி மஹராஜ் நம்பிக்கை!!

  அபிநயா   | Last Modified : 27 Oct, 2019 01:10 pm
sakshi-maharaj-claims-ram-temple-construction-will-start-by-dec-6

அயோத்தியா வழக்கில், வரும் நவம்பர் 17 ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், டிசம்பர் மாதம் முதல், ராம்ஜன்ம பூமியில் கோவிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் பாஜகவின் உன்னாவோ எம்.பி ஆன சாக்ஷி மஹராஜ்.

அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மேற்கொண்டிருந்த விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, அவ்வழக்கிற்கான தீர்ப்பு வரும் நவம்பர் 17 அன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், "கடந்த 150 வருடங்களாக இழுத்துக்கொண்டிருந்த அயோத்தியா வழக்கில், 40 நாட்களாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றத்திற்கு கண்டிப்பாக நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும், அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி, கடந்த டிசம்பர் 6 ,1992 அன்று அழிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அங்கு கோவில் எழுப்புவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கும். 

அயோத்தியா வழக்கில், உச்ச நீதிமன்றம் இனி தீர்ப்பு அறிவிக்கவில்லை எனினும், ஷியா மற்றும் வாக்ஃப் அமைப்பின் கருத்துக்கள் இந்துக்களுக்கு ஆதரவாக உள்ளதால், நிச்சயமாக தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக தான் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது." என்று கூறியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த உன்னாவோ அமைச்சர் சாக்ஷி மஹராஜ். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close