தீர்ப்புக்கு முன் எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் - யோகி ஆதித்யநாத் உத்தரவு!!

  அபிநயா   | Last Modified : 03 Nov, 2019 09:45 pm
up-cm-yogi-adityanath-issues-diktat-refrains-ministers-from-commenting-on-ayodhya-verdict

அயோத்தியா வழக்கில், தீர்ப்பு வரும் வரை, உத்திரபிரதேச மாநில அமைச்சர்கள் யாரும் அவ்வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

அயோத்தியா வழக்கில், வரும் நவம்பர் 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அமைச்சர்கள் சிலர் அவ்வழக்கு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னதாக இருக்கும் என்ற தங்களது கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்து வந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்பு நமது கருத்துக்களை தெரிவிப்பது சரியல்ல என்றும், அமைச்சர்கள் யாரும் இது குறித்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் உத்தவிட்டுள்ளார் உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

இவரை தொடர்ந்து, மற்றவரை காயப்படுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் இருக்க கூடாது என்பதால், தீர்ப்பு யாருக்கு ஆதரவாக வந்தாலும், அதை பட்டாசுக்கள் வெடித்து கொண்டாட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் அம்மாநில சிறுபான்மை இன அமைச்சரான முக்தர் அப்பாஸ் நக்வி.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close