டெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2019 04:44 pm
delhi-air-pollution-supreme-court-warning

டெல்லி காற்று மாசு விவகாரம் தொடர்பாக பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தலைமைச் செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி காற்று மாசு விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையில், ‘உங்களால் காற்று மாசை கட்டுப்படுத்த முடியாவிடில் எதற்கு அரசாங்கத்தை நடத்துகிறீர்கள்?. பயிர் எரிப்பு விவகாரத்தில் பஞ்சாப் அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. வேலைகளை சரியாக செய்யவில்லை எனில் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள்’ என்று பஞ்சாப் தலைமைச் செயலருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. காற்று மாசு விவகாரத்தில் விவசாயிகளை தண்டிப்பது தீர்வாகாது; சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி விடும்.

மேலும், ‘ நிலைமையை சரிசெய்ய முடியவில்லை எனில் மத்திய அரசே உங்கள் மாநிலத்தை ஆட்சி செய்யட்டுமே. மக்களின் உயிரைக் காக்க முடியவில்லை என்றால் எதற்காக தலைமைச் செயலாளராக இருக்கிறீர்கள்?’ என்று சராமரியாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அடுத்த 7 நாட்களுக்குள் பயிர்க்கழிவுகளை அகற்றும் பணியை செய்ய வேண்டும் என்றும், பயிர்க் கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான தொகையை நாங்கள் பெற்று தருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close