பூரி நகரை விட அதிகப்பரப்பளவு கொண்டுள்ளதா ஜகந்நாத் ஆலயம் ??

  அபிநயா   | Last Modified : 08 Nov, 2019 09:18 pm
does-jagannath-temple-has-more-acre-than-puri

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஜகந்நாத் ஆலயத்தின் பரப்பளவு பூரி நகரை விட அதிகமாக உள்ளது என்ற ஆச்சரியமூட்டும் தகவலை தற்போது வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஒடிசா மாநில பூரி நகரில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ஜகந்நாத் ஆலயம், அம்மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சேர்த்து 60,418 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது என்பது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பூரி நகரை விட 15 மடங்கு பெரிதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், பல குவாரிகளையும் சுரங்கங்களையும் சொந்தமாக கொண்டுள்ள ஜகந்நாத் ஆலயத்திற்கு அதற்கான உரிமங்கள் சரிவர செலுத்தப்படுவதில்லையாம். இது குறித்து விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதி அருண் மிஷ்ரா மற்றும் எஸ்.ரவீந்திர பட் இருவரும் கூறுகையில், பல அசைக்க முடியாத சொத்துக்களை கொண்டுள்ள ஜகந்நாத் ஆலயம் அதன் வரவுகளை எவ்வாறு செலவு செய்கிறது என்பதை குறித்த ஆய்வு நிச்சயம் அவசியம் என்று தெரிவித்துள்ளனர்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close