காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை: உச்சநீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2019 11:04 am
babar-masjid-not-built-on-vacancy-supreme-court


அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், ‘பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது.பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பே அங்கிருந்த கட்டட இஸ்லாமிய முறைப்படி கட்டவில்லை. மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாம் முறைப்படி இல்லை என்பதற்கும் ஆதாரம் உள்ளது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனனின் அடிப்படை உரிமை. மதங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மதிக்கிறது. தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது. ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என இந்துக்கள் ஒருமித்த கருத்தாக ஏற்கிறார்கள். அதே இடத்தை பாபர் மசூதி என இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள். நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய செய்ய முடியாது. ஆவணங்களின்படி ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது’ என்று, ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close