அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2019 11:53 am
rama-temple-to-be-built-in-ayodhya-supreme-court

ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீர்ப்பு வாசித்தார். அதில்,  நிர்மோகி அகாரா அமைப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்தை 3 ஆக பிரித்து கொடுத்த, அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010இல் அளித்த தீர்ப்பு தவறானது. இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள அவர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் உத்தரப்பிரதேச அரசு வழங்க வேண்டும். 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம். 3 மாதத்துக்குள் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு விரும்பினால் அறக்கட்டளையில் நிர்மோகி அகாராவுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கலாம்' என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாமன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் தொல்லியல்துறை ஆய்வு செய்த ஆவணங்கள் தீர்ப்பில் முக்கிய அம்சம் பெற்றுள்ளன.’ என்று உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close