சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு!

  அனிதா   | Last Modified : 13 Nov, 2019 12:40 pm
verdict-will-come-tomorrow-on-sabarimala-and-rafale-case

சபரிமலை மற்றும் ரபேல் வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. 

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற பரபரப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதேபோல், ரஃபேல் முறைகேடு தொடர்பான வழக்கில் 36 விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீதும் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close