டி.கே.சிவக்குமார் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி

  அனிதா   | Last Modified : 15 Nov, 2019 12:18 pm
sc-dismisses-enforcement-directorate-plea-challenging-the-bail-granted-to-dk-shivakumar

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டி.கே.சிவக்குமார் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து  அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கதுறையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close