டெல்லியில் காற்று சுத்திகரிப்பான் திட்டத்தை செயல்படுத்த உத்தரவு

  அனிதா   | Last Modified : 15 Nov, 2019 02:46 pm
order-to-implement-air-purifier-plan-in-delhi

டெல்லியில் காற்று சுத்திகரிப்பான் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் டெல்லி அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை தீயிட்டு எரிப்பதே காற்று மாசுக்கு முக்கிய காரணம் என்றும் வாகன கட்டுப்பாட்டு திட்டத்தால் காற்று மாசு 5-15 சதவீதம் வரை குறைந்திருப்பதாகவும் டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காற்று மாசு அளவு 600ஐ எட்டிய நிலையில் மக்களால் எப்படி சுவாசிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வாகன கட்டுப்பாடு திட்டத்தால் டெல்லியில் காற்று மாசு குறைய வாய்ப்பில்லை என தெரிவித்தது. மேலும், டெல்லியில் காற்று சுத்திகரிப்பு டவர் அமைப்பது குறித்து மத்திய அரசு திட்டம் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம் காற்று சுத்திகரிப்பான் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close