பா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2019 08:16 pm
refusal-to-grant-bail-to-p-chidambaram

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைக்கேடு தொடர்பான அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைக்கேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி டெல்லியில் உள்ள இல்லத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பொருளாதாரக் குற்றத்தை தீவிரக் குற்றமாகக் கருத வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close