சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு!!

  அபிநயா   | Last Modified : 16 Nov, 2019 08:59 pm
delhi-high-court-orders-removal-of-unauthorised-shiva-and-hanuman-temples-for-chandni-chowk-redevelopment-plan

சாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டம் மேற்கொள்வதற்கு தடையாக இருந்து வந்த அங்கீகரிக்கப்படாத சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

டெல்லியின் முக்கிய சாலைகளுள் ஒன்றான சாந்தினி சவுக் சாலையை மாற்றியமைக்க முடிவு செய்திருந்த டெல்லி அரசு, அதற்கு தடையாக இருக்கும் சிலவற்றை அகற்றி கொள்ள அனுமதியளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதை தொடர்ந்து, கடந்த 2015ஆம் ஆண்டு இதற்கான தீர்ப்பை வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், அங்கு அமைந்துள்ள பாதசாரி வழிகளை அகற்றி கொள்ளுமாறும் கோயில்களை அகற்ற வேண்டாம் என்றும் கூறியிருந்தது. 

இதை தொடர்ந்து, பாதசாரி வழியை அகற்றினாலும், அங்கீகரிக்கப்படாத சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை நீக்காமல் அந்த சாலையை அபிவிருத்தி செய்ய இயலாது என்ற டெல்லி அரசின் கருத்தை தொடர்ந்து, சாந்தினி சவுக் சாலையை மாற்றியமைக்கும் திட்டத்தை மீண்டும் ஓர் முறை முழுவதமாக ஆய்வு செய்த உயர் நீதிமன்றம் தற்போது அவ்விரு கோயில்களையும் அகற்றி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், சிவன் மற்றும் ஹனுமான் கோயில்கள் அகற்றப்பட்ட பிறகு அந்த சாலையை மாற்றியமைக்கப்போகும் விதம் குறித்த தகவல்கள் இன்னும் எட்டு வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close