ராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்!!!

  அபிநயா   | Last Modified : 17 Nov, 2019 06:41 pm
it-is-our-right-to-file-a-petition-maulana-arshad

ராம்ஜன்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பது தெரிந்திருந்தாலும் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்வோம் என்று கூறியுள்ளார் ஜமாயத் உலாமா இ ஹிந்த் அமைப்பை சேர்ந்த மௌலானா அர்ஷத் மதானி.

அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கலாம் என்றும், முஸ்லிம்களுக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது உச்ச நீதிமன்றம்.

இதை தொடர்ந்து, இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சன்னி வக்ஃப் வாரியம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ள போதும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும்,  ஜமாய்த் உலாமா ஐ ஹிந்த் அமைப்பும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து கூறிய ஜமாய்த் உலாமா ஐ ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி, "அயோத்தி ஶ்ரீராம் மந்திர் வழக்கின் தீர்ப்பில் எங்கள் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என்பது 100 சதவீதம் உறுதியாக தெரிந்தாலும், நாங்கள் மனு சமர்ப்பிப்போம், ஏனெனில் அது எங்களது உரிமை என்று குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close