உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே இன்று பதவியேற்பு!

  அனிதா   | Last Modified : 18 Nov, 2019 10:01 am
sa-bobde-will-sworn-in-as-supreme-court-chief-justice

உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே இன்று பதவியேற்கிறார்.

2013 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் எஸ்.ஏ.போப்டே. இவர் அயோத்தி வழக்கு விசாரணை அமர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளின் அமர்வில் இருந்து தீர்ப்பு வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நியமிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் போப்டே பதவியேற்கிறார். இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை 17 மாதங்கள் போப்டே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close