உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்!

  அனிதா   | Last Modified : 18 Nov, 2019 09:57 am
justice-sharad-arvind-bobde-takes-oath-as-chief-justice-of-india

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்றார்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நீதிபதி சரத் அரவிந்த் பாப்டேவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2013 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வந்த எஸ்.ஏ.போப்டே, ஆதார், அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளின் அமர்வில் இருந்து தீர்ப்பு வழங்கியுள்ளார். 47வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பாப்டே, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை பதவி வகிப்பார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close