ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தின் காவலை மீண்டும் நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் கடந்த 99 நாட்களாக திகார் சிறையில் உள்ளார்.
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான பின் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில், ‘மகாராஷ்டிர தேர்தல் களத்தில் பாஜக கண்ட தோல்வி அரசியல் சாசன தினத்தில் கிடைத்த பெரிய மரியாதை. நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார்.
newstm.in