பீகார் முதல்வர் மீது கல்வீச்சு! பாதுகாவலர்கள் படுகாயம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 13 Jan, 2018 07:33 am

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அதிர்ஷ்டவசமாக நிதிஷ் குமார் தப்பினார். ஆனால், அவரது காவலர்கள் காயம் அடைந்தனர். 

பீகாரில் லாலுவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றார் நிதிஷ் குமார். லாலு கட்சியைக் கூட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்குக் குறைவான எம்.எல்.ஏ-க்கள் கிடைத்த போதும், நிதிஷை முதல்வர் ஆக்கினார் லாலு. ஆனால், திடீரென்று லாலுவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தொடர்கிறார் நிதிஷ். 

இந்தநிலையில், மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட விகாஸ் சமிக்‌ஷா யாத்ரா என்ற பெயரில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் நிதிஷ் குமார். புக்சர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைக்க அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனம் மீது மர்ம நபர்கள் திடீரென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், சாதுரியமாகச் செயல்பட்ட கார் டிரைவர், வேகமாகக் காரை ஓட்டி நிதிஷ் குமாரை காப்பாற்றினார். ஆனால், நிதிஷின் பாதுகாவலர்கள் காயம் அடைந்தனர். 

இது தொடர்பாக விசாரணை நடத்த மாநில போலீசாருக்கு நிதிஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளார். தங்கள் கிராமத்துக்கு எந்த ஒரு வளர்ச்சித் திட்டப் பணியும் வந்து சேரவில்லை என்ற கோபத்தில் கிராம மக்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், தன்மீது சிலர் திட்டமிட்டு தாக்குதலைத் தூண்டிவிடுவதாக நிதிஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close