உலகின் மிக சிறிய பென்சில்; சாதனை படைத்த இந்தியர்

  PADMA PRIYA   | Last Modified : 24 Feb, 2018 11:05 am

உலகின் மிகச்சிறிய பென்சிலை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் சந்திரா உபத்யாய்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வானி பகுதியைச் சேர்ந்தவ பிரகாஷ் சந்திரா உபத்யாய். இவர், 5 மிமீ நீளமும், 0.5 மிமீ அகலமும் கொண்ட மரத்தால் ஆன பென்சிலை உருவாக்கி உள்ளார். இவரது சாதனை அசிஸ்ட் வோர்ல்டு ரிசர்ச் ஃபவுண்டேஷனின் (Assist World Research Foundation) பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

இதனை உருவாக்க மூன்று முதல் நான்கு நாட்கள் தேவைப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, 3x3x4 மிமீ அளவில் அனுமான் சலிஸா என்ற மிகச் சிறிய புத்தகத்தை உருவாக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close