கேரளாவில் முழு அடைப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 02 Apr, 2018 10:28 am

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது. 

நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்து பா.ஜ.க. ஆதரவு வர்த்தக யூனியனான பாரதிய மஸ்தூர் சங் (BMS) தவிர்த்து 16 வர்த்தக சங்கங்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தன. இதைத் தொடர்ந்து அங்கு கடைகள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. பாதுகாப்புக்காக ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மியூசியம் காவல் நிலையத்தில் இருந்து  ஆளுநர் மாளிகை வரை தொழிலாளர்கள்  ஊர்வலமாக செல்ல உள்ளனர். பிற மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்று தொழில் சங்கங்கள் தெரிவித்து உள்ளன. போராட்டத்துக்கு அரசு ஆதரவு உள்ளதால், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயங்கவில்லை. பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  இதனால், தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

இதேபோல், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதைக் கண்டித்து பஞ்சாப், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் நியூட்ரினோ, காவிரி, ஸ்டெர்லைட் போராட்டம் நீடிக்கிறது. இதனால், நாடு முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close