டூவீலரோடு ஆளையும் வாகனத்தில் ஏற்றிய போலீஸ்- வைரல் வீடியோ!  

  சுஜாதா   | Last Modified : 02 Jun, 2018 07:34 am

men-loaded-with-his-bike-into-tempo-viral-video

புனேவில் உள்ள விமன் நகரில், சாலையில் வாலிபர் ஒருவர் நோ பார்க்கிங் இடத்தில் வண்டியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ரோந்து போலீசார் வண்டியை அப்புறப்படுத்த கூறியுள்ளனர். இதனால் டென்ஷன் ஆன வாலிபர், போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. எனவே, ஆத்திரமடைந்த போலீசார் வண்டியோடு சேர்த்து அவரையும் சேர்த்து, போலீஸ் வாகனத்தில்(டெம்போ) ஏற்றி கொண்டு சென்றனர். சிறிது தூரத்தில் வாலிபரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதனை தொடர்ந்து 'நோ பார்க்கிங்'கில் வண்டியை நிறுத்திய அந்த வாலிபருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கும் இந்த வீடியோவை பார்த்த மக்கள் பலரும்  போலீசாரை கண்டித்து கமெண்ட் செய்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆய்வாளர் பி.ஜி. மிசல் தெரிவித்துள்ளார். அதேபோல், போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.