சிறுநீரை விட அசுத்தமான குடிநீர்: தூய்மை நகரம் போபாலின் நிலை

  Newstm News Desk   | Last Modified : 08 Jun, 2018 08:39 am

study-says-bhopal-s-drinking-water-has-more-bacteria-than-urine

போபாலில் குடிநீரில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு சிறுநீரில் இருப்பதை விட அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் ஆய்வின் படி இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது போபால். ஏரிகளின் நகரம் என்று சொல்லப்படும் இந்த பகுதியில் சமீபத்தில் டாக்டர். சுபாஷ் சி பாண்டே என்ற சுற்றுசூழல் ஆய்வாளர் குடிநீரின் தூய்மை பற்றி ஆய்வு நடத்தினார்.

அதற்காக அவர் நகரத்தில் 40 இடங்களில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். ரயில்வே நிலையம், அரசு மருத்துவமனை, அரசு கல்லூரி, பேருந்து நிலையம், அடி பம்ப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட நீரின் தூய்மை தன்மை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருப்பது அவரது ஆய்வில் தெரியவந்துள்ளது.

போபால் மக்கள் பொது இடங்களில் குடிக்கும் நீரில் உள்ள பாக்டீரியாவின் அளவு, ஒரு மனிதனின் சிறுநீரில் இருக்கும் பாக்டீரியாவின் அளவை விட அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நீரை குடிப்பவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், முடி உதிர்தல், பேதி உட்பட பல நோய்கள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சுபாஷ் சி பாண்டே போபால் மேயர் அலோக் சர்மாவிடம் புகார் அளித்துள்ளார். அதற்கு அவர், “இது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. இந்த நிலை இருக்கிறது என்பதைகூட நான் அறிந்திருக்கவில்லை. இதுகுறித்து யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close