நிபா வைரஸ்: உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கு செய்த கேரள மருத்துவர்கள்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 09:02 am
kerala-doctors-performs-last-rites-of-nipah-victims

நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மயான ஊழியர்கள் மறுத்ததால் மருத்துவர்களே இறுதி சடங்கை செய்தனர்.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு, 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில், 14 பேர், கோழிக்கோடு மருத்துவமனையிலும், மூன்று பேர், மலப்புரம் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் சிலரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்த, நெருங்கிய உறவினர்களுக்கும், நிபா வைரஸ் பரவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, டாக்டர்கள் தலைமையில், சுகாதார ஊழியர்களே, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இறுதிச் சடங்கு செய்ய முடிவு செய்யப்பட்டது. கோழிக்கோடு மருத்துவமனையில் இறந்த, 12 பேரின் உடல்களுக்கும், கோழிக்கோடு மாவட்ட சுகாதார அதிகாரி கோபகுமார் தலைமையில், மருத்துவ குழுவினர் இறுதி சடங்குகளை செய்தனர்.

இதுகுறித்து கோபகுமார் கூறும்போது, "நிபா வைரசுக்கு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய, மயான ஊழியர்கள் மறுத்ததால், நாங்களே, உரிய பாதுகாப்பு உடை மற்றும் முக கவசம் அணிந்து, பள்ளம் தோண்டி, உடல்களை கனமான பிளாஸ்டிக் உறைகளில் சுற்றி, சடங்குகளை செய்து, அடக்கம் செய்தோம். இறுதி சடங்குகளை உறவினர்கள் செய்ய முடியாமல் போனது பெரிய வலி" என்றார். கேரள சட்டசபை கூட்டத்தில், இதுகுறித்த விவாதத்தின்போது, டாக்டரின் சேவையை, மாநில சுகாதார துறை அமைச்சர், ஷைலஜா பாராட்டினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close