ஹவுரா ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டது

  Newstm News Desk   | Last Modified : 10 Jun, 2018 09:41 am

howrah-mail-train-derailed-near-igatpuri

மும்பை-ஹவுரா ரயிலின் 3 பெட்டிகள் இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் இகாட்பூரி அருகே தடம்புரண்டது. இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

மகாராஷ்டிர மாநிலம் இகாட்பூரி அருகே மும்பையில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் எதிர்பாராத விதமாக இன்று காலை தடம் புரண்டது. இதனால் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 7 ரயில்கள் வேறு வழிக்கு மாற்றப்பட்டன.

இதுகுறித்து மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் உதேசி கூறும் போது, “12809 மும்மை- ஹவுரா ரயில் நாக்பூர் வழியாக செல்கிறது. இதில் 3 பெட்டிகள் இகாட்பூரி அருகே அதிகாலை தடம்புரண்டது. எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும், யாருக்கும் காயமும் ஏற்படவில்லை” என்றார்.

இதனை, தொடர்ந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுபட்டுள்ளன. ரயில் தடம் புரண்டது ஏன் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. எனவே, காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close