அரசு பங்களா பொருட்களை எடுத்து சென்ற அகிலேஷ்: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2018 05:08 pm
bjp-accuses-akhilesh-yadav-of-leaving-govt-bungalow-in-shambles

அரசு பங்களாவை ஆக்கிரமித்தாக எழுந்த குற்றச்சாட்டில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு பங்களாவை காலி செய்த அகிலேஷ் யாதவ், வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றும் சேதப்படுத்தியதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர்களான பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதிக் தலைவர் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ், மத்திய உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங், என்.டி.திவாரி ஆகியோர் நீண்ட ஆண்டுகளாக அரசு பங்களாவை ஆக்கிரமித்துத் தங்கி இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவர்கள் உடனடியாக அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவ் தனக்கு அளிக்கப்பட்ட அரசு வீட்டை காலி செய்தார். ஆனால், விட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை அவர் தூக்கிச் சென்றதாக பா.ஜ.க அரசு தற்போது குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ஸ்வதந்திரா தேவ் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "லக்னோ நகரில் அகிலேஷ் யாதவின் அரசு பங்களா அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை காலி செய்தபோது அவர் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள், குளிக்கும் தொட்டி, ஷவர், தண்ணீர் வரும் குழாய், விலை உயர்ந்த விளக்குகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டார். சமையல் கூடம், சைக்கிள் ஓட்டும் இடம், பூங்கா ஆகியவற்றையும், சேதப்படுத்தி சென்றிருக்கின்றனர். 

இப்படி சிறுபிள்ளைத்தனமாக முன்னாள் முதல்வர் செய்யலாமா? அரசு பங்களாவில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அரசின் சொத்துக்கள், அவற்றுக்கு எந்தவிதமான சேதமும் வராமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கும், முன்னாள் முதல்வருக்கும் இருக்கிறது. அகிலேஷ்யாதவின் செயல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாகும். இது குறித்து விசாரணை நடத்தப்படும். சிறுபிள்ளைகள் தான், தனக்கு ஒரு பொருள் கிடைக்காவிட்டால் அதனை போட்டு உடைப்பார்கள்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close