ஆளுநர் வீட்டில் கெஜ்ரிவால் தூங்கி எழுந்து தர்ணா போராட்டம்

  Padmapriya   | Last Modified : 12 Jun, 2018 11:39 am
12-hours-after-arvind-kejriwal-s-sit-in-protest-at-lt-governor-s-continues

டெல்லியின் முதல்வரான அர்விந்த் கெஜ்ரிவால், அரசு அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் வீட்டில் தர்ணா செய்து அங்கேயே தூங்கி எழுந்தார். 

டெல்லியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், ரேசன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை கொண்டுவந்தார். ஆனால் இவற்றை முறையாக நடத்தவிடாமல், இந்த திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணித்தனர். கேஜ்ரிவாலின் உத்தரவை நிறைவேற்றாமல் இருட்டடிப்பு செய்வதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

இந்நிலையில், மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வீட்டில் படுத்து தூங்கி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுதொடபாக அவர் நேற்று இரவு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்திக்க அவரது இல்லம் சென்றார். ஆனால் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் ஆளுநர் வீட்டின் வரவேற்பாளர் அறையில் பல மணி நேரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கினார். அவருடன் மாநில மந்திரிகளும் உடனிருந்தனர். 

இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில், அரசின் திட்டங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்ற மறுக்கின்றனர். சட்டசபையில் டெல்லிக்கு மாநில அரசு அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் கைப்பாவையாக துணை நிலை ஆளுநர் செயல்படுவது சரியல்ல எனவும் அப்போது கேஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close