புழுதிப்புயலால் 26 விமானங்கள் ரத்து.. பொதுமக்கள் அவதி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 16 Jun, 2018 03:04 am
26-flights-canceled-due-to-dirty

புழுதிப்புயல் காரணமாக 26 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சண்டிகரில் நேற்று புழுதிப்புயல் காரணமாக மோசமான வானிலை நிலவியது. விமான நிலையத்தின் ஓடுபாதை சரியாகத் தெரியாததால் நேற்று அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் புழுதிப்புயல் காரணமாக சண்டிகரில் இன்றும் விமான ஓடுபாதை தெளிவாகத் தெரியவில்லை. எனவே, 2-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று மாலை நிலவரப்படி 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கால் டாக்சிகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. திடீரென கட்டணம் உயர்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலையில் திடீர் மாற்றம் ஏற்படும் என்றும், புழுதிக் காற்றுடன் மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close