கடன் கேட்க விவசாயியின் மனைவியை படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளர்!

  shriram   | Last Modified : 24 Jun, 2018 11:39 pm
branch-manager-booked-for-asking-sexual-favours-to-farmer-s-wife

மஹாராஷ்ரா மாநிலத்தில், பயிர்க்கடன் கேட்க வந்த விவசாயியின் மனைவியை படுக்கைக்கு அழைத்த வங்கியின் மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர். 

மகாராஷ்டிராவின் மலகபூர் பகுதியில் உள்ள சென்ட்ரல் வங்கியில், பயிர்க்கடன் வாங்க ஒரு விவசாயி தனது மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது அந்த வங்கியின் கிளை மேலாளர் ராஜேஷ் ஹிவஸே, விவசாயி மனைவியின் செல்போன் எண்ணை வாங்கி வைத்து விட்டு, அவரை அழைத்துள்ளார். தன்னிடம் அவர் ஆபாசமாக பேசியதாகவும், படுக்கைக்கு அழைத்ததாகவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

மேலும், தனது பியூனை அந்த பெண் வீட்டுக்கு அனுப்பி, மேலாளரின் ஆசைக்கு இணங்கினால், கடன் உடனடியாக கிடைக்கும் என்றும், மேலும் பல சலுகைகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். ஹிவாஸேயிடம் தொலைபேசியில் பேசியவற்றை அந்த பெண் ரெக்கார்ட் செய்து, அதை ஆதாரமாக போலீசாரிடம் வழங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, போலீசார் பல்வேறு பிரிவுகளில் மேலாளர் மற்றும் பியூன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து வங்கி மேலாளரும், பியூனும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விவசாய கடன் கேட்டு சென்ற விவசாயியின் மனைவியை படுக்கைக்கு அழைத்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close