4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட முதல் மாநிலமாகிறது கேரளா

  Newstm Desk   | Last Modified : 24 Jun, 2018 04:34 pm
from-september-kerala-will-be-first-state-to-have-4-international-airport

நாட்டிலேயே 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தின் 4வது பெரிய நகரமான கன்னூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,892 கோடி மதிப்பீட்டில் சர்வதேச விமான நிலையம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா குறித்த பேச்சுவார்த்தைக்காக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, முதல்வர் பினராயி விஜயனை நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து கன்னூர் சர்வதேச விமான நிலையம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். இதன் மூலம் நாட்டிலேயே 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட ஒரே மாநிலமாக கேரளா உருவெடுக்க உள்ளது. தற்சமயம் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோடு ஆகிய 3 சர்வதேச விமான நிலையங்கள் கேரளாவில் உள்ளன.

இந்த விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும் போது நாள் ஒன்றிற்கு 2,000 பயணிகளும், ஆண்டு ஒன்றிற்கு 15 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டிருக்கும்.

இந்த விமான நிலையத்தில் தற்சமயம் 3,050 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது, விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த அடுத்த 18 மாதங்களில் ஓடுதளத்தின் நீளம் 3,400 மீட்டர்களாகவும், அடுத்தகட்டமாக 4,000 மீட்டர் கொண்டதாகவும் மேம்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டிலேயே 4வது மிகப்பெரிய விமான நிலையமான இது உருமாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close