அதிக விலைக்கு உணவு விற்பனை: தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் 

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 08:58 pm
pune-mns-workers-thrash-theatre-manager-over-high-prices-of-food

புனே திரையரங்கு ஒன்றில் அதிக விலைக்கு உணவு விற்பனை செய்ததால் மேலாளர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள திரையரங்கில் நேற்று உணவுப் பொருள் விலை அதிகமாக இருப்பதாக கூறி தியேட்டர் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வந்த திரையரங்க மேலாளர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். 

ஆனால் வாடிக்கையாளர்கள் அவரை தாக்க தொடங்கினர். அவர்கள் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம்நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த அமைப்பு சேர்ந்தவர்கள் இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவது முதன்முறையல்ல என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் ஓட்டலில் இலவச குளிர் பானம் தராததால் ஓட்டல் ஊழியர்களை இவர்கள் தாக்கிய உள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close