கேரள பாதிரியார்கள் விவகாரம்: காவல்துறை விசாரணையை முடக்கும் கிறிஸ்தவ சபை?

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 04:32 pm
kerala-crime-branch-to-investigate-church-sexual-assault-case

கேரளாவில் 5 பாதிரியார்கள் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தை கேரள மாநில குற்றப் பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் செல்லக்கூடாது என கிறிஸ்தவ சபை தடை விதித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

கேரளாவில் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள மலங்கரா ஆர்தோடக்ஸ் என்ற கிறிஸ்தவப் பிரிவின் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் எழுதிய கடிதத்தில்,  "எனது மனைவி பாவ மன்னிப்பு கேட்கும் பொருட்டு மலங்கரா ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவ சபையின் கீழ் இயங்கி வரும் மலப்பள்ளி சர்ச்சிற்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு பாவமன்னிப்பு கொடுப்பதை விட்டுவிட்டு, அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி, 5 பாதிரியார்கள் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், இதனை வெளியில் சொல்ல கூடாது எனவும்  எனது மனைவியை மிரட்டியுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் பேசிய ஆடியோ ஒன்றும் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. பிரச்னை பெரிதாகவே, சம்பந்தப்பட்ட 5 பாதிரியார்களும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கிறிஸ்துவ சபை விசாரணை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை அந்த பெண்ணிடம் இருந்து காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை என கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடுத்து, கேரள க்ரைம் பிரான்ச் போலீசார் இதுகுறித்து விசாரிக்கும்படி கேரள காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே, அந்த பெண் காவல்துறைக்கு செல்லக்கூடாது என அந்த கிறிஸ்துவ சபை மிரட்டுவதாகவும், காவல்துறைக்கு செல்ல விடாமல் இந்த விவகாரத்தை முடக்கும் பணியில் சபை ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மதத்தின் பெயரை காரணம் காட்டி யாரும் தப்பிக்கக் கூடாது என்று கேரள கிறிஸ்தவ மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close