டெல்லியில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்ம சாவு... மக்கள் பீதி

  Padmapriya   | Last Modified : 01 Jul, 2018 01:11 pm
new-delhi-11-members-of-a-family-found-dead-in-burari

டெல்லியில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து 11 பேர் உடல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கூட்டு தற்கொலையில் ஈடுபட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியின் வடக்கே உள்ளது புராரி பகுதியில் உள்ள வீட்டில், கண்கள் கட்டப்பட்ட நிலையில் 10 பேர் தூக்கில் தொங்குவதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, ஏழு பெண்கள், 4 ஆண்கள் என 11 பேர் இறந்து கடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மூதாட்டி ஒருவரின் உடல் தரையில் கிடந்துள்ளது. இவர்களில் மூன்று பேர் இளம் பெண்கள். 

வீட்டின் கீழ்பகுதியில், அந்தக் குடும்பத்தினர் ஒரு மளிகைக் கடையையும், மரக் கடையையும் வைத்து நடத்தி வந்துள்ளனர். வழக்கமாக காலை 7 மணிக்கு எல்லாம் கடை திறந்துவிடுவார்கள். ஆனால், இன்று நீண்ட நேரம் ஆகியும் கடை திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தபோதுதான் 10 பேர் தூக்கில் தொங்கியதை கண்டு போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

இவர்கள் குடும்பமாக தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டின் கீழ் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா வீடியோக்களை வாங்கி ஆய்வு செய்து வருகின்றனர். உடல்களை உடல்கூறு ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வந்து ஆய்வு நடத்தினார். டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலியாகியிருப்பது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close