கேரள பிஷப் மீது மற்றொரு கன்னியாஸ்திரி புகார்: விரைவில் கைதாக வாய்ப்பு 

  Padmapriya   | Last Modified : 08 Jul, 2018 06:14 pm
kerala-police-to-question-jalandhar-bishop-after-nun-alleges-he-raped-her-13-times

கேரளாவில் பிஷப் 13 முறை தன்னை வன்புணர்வு செய்ததாக கன்னியாஸ்திரி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அவர் மீது ஆலப்புழாவைச் சேர்ந்த மற்றொரு கன்னியாஸ்திரியும் வன்புணர்வு புகார் அளித்துள்ளார். 

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருக்கும் பிராங்கோ என்பவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் கூறியிருந்தார்.

இது தொடர்பாக வைக்கம் போலீஸ் டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கனாச்சேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி 7 மணி நேரம் ரகசிய வாக்குமூலத்தை அளித்துள்ளார். அப்போது அது தொடர்பான ஆதாரங்களையும் அவர் சமர்பித்ததாக சங்கனாச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் புகார் கூறப்பட்டுள்ள பி‌ஷப் பிராங்கோ எந்த நேரத்திலும் கேரள போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

தனிப்படை போலீசார் ஜலந்தர் சென்று பி‌ஷப்பை கைது செய்யலாம் அல்லது அவருக்கு நோட்டீஸ் அனுப்பி கேரளாவுக்கு வரவழைக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ஜலந்தர் பி‌ஷப் பிராங்கோ மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. ஆலப்புழாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரின் தந்தை இந்த புகாரை அளித்துள்ளார். தனது மகள் ஜலந்தரில் கன்னியாஸ்திரியாக இருப்பதாகவும், பி‌ஷப் மீது பாலியல் புகார் கூறியுள்ள கன்னியாஸ்திரிக்கு எதிராக தனது மகளை மிரட்டி வன்புணர்வில் ஈடுபட்டு, கடிதம் ஒன்றை எழுதி வாங்கி உள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close