பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை!

  Newstm News Desk   | Last Modified : 10 Jul, 2018 09:42 am

encounter-breaks-out-in-shopian-jk

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான்  பகுதியில் உள்ள குண்டலனில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடை பெற்று வருகிறது.

சோபியான் மாவட்டம் குண்டலன் பகுதியில் ஒரு வீட்டில் 5 முதல் 6 தீவிரவாதிகள் இருக்கலாம் என பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் மக்களை வெளியேற்றம் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பணியின் போது பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிசண்டை நடைபெற்று வருகிறது.

இதில் 37 ஆர் ஆர் பிரிவைச் சேர்ந்த மத்திய ரிசேர்வ் படை போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.  தீவிரவாதிகள் சுட்டதில் 2 ராணுவ வீர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close