மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்!!

  சுஜாதா   | Last Modified : 14 Jul, 2018 09:13 am
earthquake-in-maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி,  இது சுமார் 2.4 ரிக்டர் அளவில் பதிவானது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே, டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில்  நேற்று இரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி  
 சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் கூறுகையில், "மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது.  இது சுமார் 2.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதனால் சேதம் ஏற்படவில்லை" என தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close