டெல்லியில் 15 ஆயிரம் உயிரை காவு வாங்கிய காற்று மாசு! அதிர்ச்சி ரிப்போர்ட்

  Newstm Desk   | Last Modified : 15 Jul, 2018 09:35 am
15000-delhi-people-died-because-of-air-pollution

காற்று மாசு காரணத்தால் டெல்லியில் 2016ம் ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

உலகளவில் காற்று மாசால் உயிரிழப்பவர்கள் பற்றிய ஆய்வை தாய்லாந்து, சிங்கப்பூரைச் ஆராய்ச்சியாளர்களுடன், மும்பை ஐஐடி  ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து நடத்தினர். இந்த ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்துள்ளது.

அவர்களின் ஆய்வு முடிவின் படி 2016ம் ஆண்டில் மாசடைந்த காற்றால் மக்கள் உயிரிழப்பு டெல்லியில் அதிகமாக இருந்துள்ளது. அந்த ஆண்டில் மட்டும் தலைநகர் டெல்லியில் 14,800 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய நகரங்களை பொறுத்தவரை அடுத்தடுத்த இடத்தில் மும்பை 10,400 உயிரிழப்புகள், கொல்கத்தா 7,300 உயிரிழப்பு, கராச்சி 7,700 உயிரிழப்புகள், சென்னை 4,800 உயிரிழப்புகளுடன் உள்ளன.

உலகவில் இந்த பட்டியலில் பெய்ஜிங் மற்றம் ஷாங்காய் முதல் இடத்தில் உள்ளன. பெய்ஜிங்கில் 18 ஆயிரத்து 200 பேரும், ஷாங்காய் 17 ஆயிரத்து 600 பேரும் உயிரிழந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த பட்டியலில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close