குழந்தை கடத்தல் வதந்தி: பொறியாளரை அடித்தே கொன்ற கிராம மக்கள்

  Padmapriya   | Last Modified : 15 Jul, 2018 02:15 pm
techie-killed-3-injured-by-rumour-driven-mob-in-karnataka-s-bidar

வாட்ஸ்ஆப்பில் பரவிய வதந்தியால், குழந்தையைக் கடத்த முயன்றதாக தகவல் தொழில்நுட்ப பொறியாளர் ஒருவர் கர்நாடக கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். 

ஐதராபாத்தில் உள்ள கூகுள் நிறுவத்தில் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களாக பணியாற்றி வந்த முகமது ஆசம், பஷீர், சல்மான் மற்றும் அக்ரம் ஆகிய நால்வரும் விடுமுறைக்காக கர்நாடகாவுக்கு காரில் சென்றுள்ளனர். 

அங்கு முர்கி என்ற கிராமத்தின் அருகே நின்று கொண்டிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட்டுகளை இவர்கள் வழங்கி உள்ளனர். இதைப் பார்த்த கிராமவாசி ஒருவர், குழந்தைகளைச் சிலர் கடத்த முயல்வதாக வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து கூட்டமாக திரண்டு வந்த கிராம மக்கள், அந்த நான்கு இளைஞர்களையும் சுற்றிவளைத்து அடித்து உதைத்தனர்.

காரில் ஏரி நான்கு பேரும் தப்ப முயன்ற போது, கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. அப்போதும் விடாமல், காருக்குள் சிக்கிய நான்குபேரையும் வெளியில் இழுத்து, அடித்து உதைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில், முகமது ஆசம் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மற்ற மூன்று பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார், வதந்தி பரப்பிய வாட்ஸ் ஆப் அட்மின் உட்பட கிராமத்தைச் சேர்ந்த 32 பேரை கைது செய்தனர்.  படுகாமடைந்த 3 மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வடமாநிலத்தவர் குழந்தைக் கடத்தலில் ஈடுபடுவதாக சமீப காலமாக வாட்ஸ் அப்பில் வரும் ஒரு எச்சரிக்கை ரீதியான வதந்தியால் 11 மாநிலங்களில் 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துள்ளனர். வட மாநிலத்தவர் குழந்தை கடத்த வந்துள்ளதாக வதந்தி தொடர்ந்து பரவி வருகிறது. இதனை மனதில் வைத்து நடமாடும் அப்பாவிகளைக் கடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் சந்தேகத்துடன் தாக்குவது சமீபகாலமாக ஆங்காங்கே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்ககது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close