பெங்களூரு: அருவியில் செல்ஃபி எடுத்த இருவர் பலி

  கனிமொழி   | Last Modified : 17 Jul, 2018 03:49 pm
2-it-workers-dead-while-taking-selfie

மேகதாது நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்ற ஐ.டி ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியிலும் அதன் துணை நதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேகதாது அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பெங்களூரில் பிரபலமான ஒரு ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் ஷமீர் ரஹ்மான், பவனி சங்கர் ஆகிய இருவரும் மேகதாது நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர்.

கொட்டும் நீர்வீழ்ச்சியின் பின்னணியில் செல்பி எடுக்க ஆசைப்பட்ட இருவரும் அந்த நீர்வீழ்ச்சியின் முனையில் நின்று செல்பி எடுக்க முயன்றனர். அப்போது ரஹ்மான் தவறி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற பவானிசங்கர் முயற்சித்துள்ளார். இதில், அவரும் சிக்கினார். சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மேகதாது நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமீப காலமாக செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. செல்ஃபியை விட உயிர் முக்கியம் என்பதை உணர்ந்தால் இதுபோன்ற உயிரிழப்புக்களைத் தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close