6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் : அதிர்ச்சியில் மகளிர் செயல்துறை தலைவர்

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 05:36 am
6-year-old-raped-in-delhi-dcw-cheif-horrified

ஜூலை 14 அன்று கலி மந்திர் , டெல்லி அருகில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி மர்ம நபரால் கடத்த பட்டார். அந்த சிறுமியின் குடும்பம் வீடு வாசல் ஏதும் இன்றி நடைபாதையில் குடியிருப்பது தெரிய வந்தது. தன் மகளை காணவில்லை என்று டெல்லி போலீசாரிடம் அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். டெல்லி மகளிர் செயல்துறையும்(டி.சி.டபுள்யு) அந்த புகாரின் அடிப்படையில் சிறுமியை தேட ஆரம்பித்தனர். அன்று இரவு 11.30 மணி அளவில் சிறுமியின் உடல் இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியை கடத்திய 24 வயது இளைஞர் ஒரு போதை அடிமையானவன் என்றும் அந்த 6 வயது சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

        உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் உள் உறுப்புக்கள் சேதமான நிலையில் அச்சிறுமி உயிர் பிழைப்பது கடினம் என்று கூறியுள்ளார் ,டி.சி.டபுள்யு தலைவர் ஸ்வாதி மலிவால். மேலும் டெல்லி மகளிர் செயல்துறையால் முடிந்த பண உதவியை உடனடியாக செய்வோம் என்றும் கூறினார். “பாதிக்கப்பட்ட சிறுமியை பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது. இது போல ஒரு மோசமான வழக்கை இதுவரை நான் பார்த்ததேயில்லை, அதுமட்டுமில்லாமல் அவள் வீடற்ற நிலைமை தெரிந்ததும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.”என்று கவலையுடன் தெரிவித்தார் ஸ்வாதி மனிலால். மேலும் குற்றவாளிக்கு உடனடி தண்டனையும் பெறச்செய்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close