பள்ளி மாணவனின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2018 01:43 pm

school-teacher-cut-student-hair-in-maharastra

பள்ளி ஆசிரியை மாணவனின் தலைமுடியை  வெட்டியெறிந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்தது .

விஷ்ராந்த்வாடி புனே சர்வதேச பள்ளியில் 6-வது வகுப்பில் மாணவன் ஆர்யன் அமித் வாக்மேர் படித்து வருகிறான்.  3 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு மாணவன் ஆர்யன் சென்றிருந்தான்.அப்போது பள்ளி வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஆர்யனை அருகில் அழைத்து அவனது தலையின் முன்பகுதிகளி்ல் இருந்த முடியை ஆசிரியை ஸ்வேதா குப்தா வெட்டிவிட்டார்.

வீட்டுக்குச் சென்ற ஆர்யன் தனது தாய் ஆதித்தியிடம் புகார் தெரிவித்துள்ளான் . இந்த செயலால் கோபமடைந்த ஆதித்தி உடனடியாக  புனே விஷ்ராந்த்வாடி போலீஸ் நிலையத்திற்க்கு சென்று புகார் கொடுத்தார். “எனது மகன் தவறு செய்திருந்தால் தண்டனை தரலாம். ஆனால் தவறு செய்யாத நிலையில் அவனது தலைமுடியை ஏன் வெட்டவேண்டும். ஏற்கெனவே கடந்த ஜூன் மாதத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. நான் அதை அப்போது பெரிதுபடுத்தவில்லை ஆனால்  இப்போது பள்ளியிலும்,  புகார் கொடுத்துள்ளேன்” என்றார் ஆதித்தி.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் பள்ளி நிர்வாகத்தாரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை ஸ்வேதா குப்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close