யமுனையில் வெள்ள அபாய எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2018 09:21 pm
flood-warning-in-yamuna

யமுனா நதியிலிருந்து சுமார் 1.3 லட்ச கன அடி நீர் நேற்று காலை திறந்து விடப்பட்ட நிலையில் டெல்லி அரசு மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவே டெல்லியின் முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை என கூறப்படுகிறது. மீட்பு பணிகளுக்காக படகுகள் தயாராக வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் டெல்லியின் சில தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நேர்ந்தால் உடனடியாக மீட்பு பணி  அமைக்க, பாசன மற்றும் வெள்ள கட்டுப்பாடு துறை தயாராக இருக்கிறது.

இந்த யமுனா நதிக்கு குறைந்தது 10 ஏரிக்கரைகள் இருந்தாலும், வெளியிடப்பட்ட நீரால் டெல்லியின் முக்கிய நகரங்களில் வெள்ளம் வர வாய்ப்பு உள்ளதாகவும் ஏரியின் கரையோர பகுதிகள் பாதிக்கப்படும் என்று வெள்ளம் கட்டுப்பாடு நிறுவனம் கூறியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் "வெள்ளம் வரக்கூடிய பகுதிகளில் குறைந்தது 20ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். தண்ணீர் நிலை அதிகரிக்கும் போது கண்டிப்பாக டெல்லியின் வடக்கு பகுதியின் தாழ்வான இடங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படுவர்" என்று வெள்ளம் கட்டுப்பாடு துறை அதிகாரி கூறியுள்ளார்.

டெல்லி என்.சி.ஆர் பகுதிகளில் பருவ மழையின் தாக்கத்தினால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலையிலிருந்து பலத்த மழை பெய்ய ஆரம்பித்த நிலையில் அங்கிருக்கும் சாலைகளும் பூங்காக்களும் மழை நீரால் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரையிலும் இந்த கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஹரியானா அரசு 1.3 லட்ச கன அடி நீரை வியாழன் அன்று திறந்துவிட்டது. திறக்கப்பட்ட ஏறி நீர் குறைந்தது 48 நேரத்தில் டெல்லியை வந்து சேரும் நிலையில் ஏற்கனவே முதற்கட்ட வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது டெல்லி அரசு.யமுனா நதியின் நீர் அளவு ஏற்கனவே ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 2013ம் ஆண்டு ஹரியானா 8 லட்ச கன அடி நீரை யமுனாவில் இருந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close