காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் : ஒருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2018 09:42 pm
bomb-blast-at-kashmir-one-killed

ஜம்மு காஷ்மீரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலி. 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தின்போது காஷ்மீரில் உள்ள ஜபோவால் கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த கூலியாட்கள் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது ஒரு பழைய வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது என்ற தகவல்கள் வெளியானது.

''நாங்கள் இன்று காலை வயலில் நடவு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். தண்ணீர் குடிப்பதற்காக சிறிது நேரம் உட்கார்ந்திருந்த போதுதான் திடீரென அருகில் எங்கோ திடீரென குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது'' என்று  சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மே மாதத் தொடக்கத்தில், சர்வதேச எல்லை யோரம் பாகிஸ்தான் ராணுவத்தினர் செலுத்திய குண்டு ஒன்று ஆர்னியா மற்றும் ராம்கர் செக்டர் பகுதிகளில் விழுந்து போலீஸ் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று நிகழ்ந்துள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று காவல் துறை விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆர்னியா செக்டர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close