• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

சந்திரபாபு நாயுடுவின் மகனால் என் மீது வழக்கு: நடிகை ரோஜா  

  சுஜாதா   | Last Modified : 01 Aug, 2018 08:38 am

actress-roja-talks-about-telugu-desam-party

ஆந்திர மாநில  முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான லோகேஷ் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் ரோஜா கூறியதாவது:

"சாலை மறியல் போராட்டம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்திலும் எனக்கு இதே தான் நடந்தது. எந்த தவறும் செய்யாத என்னை ஒரு வருடம் சட்டமன்றத்துக்குள் நுழையவிடாமல் செய்தார்கள்.

தற்போது நடத்திருப்பதும் ஆளும் கட்சியின் திட்டமிட்ட சதி. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான லோகேஷ் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினரிடம் இருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன். நியாயத்துக் காக தொடர்ந்து போராடுவேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை கோர்ட்டில் சந்திப்பேன்" இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக, ஆந்திர மாநிலம் நகரியை அடுத்த அகரம்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் அதிவேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து இந்த கல்குவாரியின் லாரிகளால் இதே போன்று பல விபத்துகள் ஏற்படுகின்றன என கூறி நடிகை ரோஜா சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், சாலைமறியல் போராட்டம் தொடர்பாக நடிகை ரோஜா மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.