4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மணிப்பூரில் வழங்கப்பட்டுள்ள முதல் மரண தண்டனை

  சுஜாதா   | Last Modified : 01 Aug, 2018 09:51 am
court-awarded-death-penalty-to-a-21-year-old-man-for-rape-and-murder-case

மணிப்பூர் மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமையை செய்த நபருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது சுதந்திரத்திற்கு பிறகு மணிப்பூரில் வழங்கப்பட்டுள்ள முதல் மரண தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.
      
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மணிப்பூர் மாநிலம் மரம் கவானம் கிராமத்தை சேர்ந்த  4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இக்கொடூர சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்க முன் வராத நிலையில், போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். 

அப்போது டேவிட் என்ற 21 வயது இளைஞனை போலீசார் கைது செய்தது.மேலும்   21 பேரை சாட்சிகளாக சேர்த்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்றது. ஆனால் இந்த சாட்சிகள் தங்கள் உயிருக்கு பயந்து சாட்சி சொல்ல முன்வராத நிலையில், அவர்களுக்கு தக்க பாதுகாப்பு கொடுத்து வழக்கை சிறப்பாக நடத்தி குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கிற்கு நேற்று தீர்ப்பு அளித்த சிறப்பு நீதிபதி, டேவிட் குற்றவாளி என்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார். சுதந்திரத்திற்கு பிறகு மணிப்பூரில் வழங்கப்பட்டுள்ள முதல் மரண தண்டனை இதுவாகும். 

பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களோ, பெற்றோரே பயந்து புகார் அளிக்காத நிலையில், போலீசார் தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து  குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close