திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் புகழஞ்சலி

  பத்மபிரியா   | Last Modified : 07 Aug, 2018 09:56 pm
karunanidhi-death-prime-minister-modi-governer-ramnath-govind-s-mourning

கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி,  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.திமுக தலைவர் கருணாநிதி ஜூலை 28-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் மாலை 6. 10 மணிக்கு காலமானதாக மருத்துவமனை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. 

உணவுக் குழாயில் நோய் தொற்று, காய்ச்சல், ரத்த அழுத்தம் குறைவு, பிறகு உடல்நிலை சீரானது என மாறி மாறி ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட அவரது உடல்நிலை, நேற்று (ஆகஸ்ட் 6) மோசமானது.  தொடர்ந்து அவரது மறைவு குறித்த அறிவிப்பை அடுத்து சென்னை ராஜாஜி ஹாலில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதியுடனான சில சந்திப்புகளை நினைவு கூறும் விதமாக சில புகைப்படங்களை பகிர்ந்து, " கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு குறித்து அறிந்து பெரும் துயரமடைந்தேன்.  

இந்தியாவின் மிக மூத்த தலைவர்களுள் ஒருவர் அவர்.  ஒரு ஆழமான வேரூன்றிய வெகுஜன மக்களின் தலைவர். செழிப்பான சிந்தனையாளர், திறமையான எழுத்தாளர் மற்றும் தனது வாழ்வின் பெரும்பாதியை முழுமையாக ஏழைகளுக்காகவும் பிற்படுத்தப்படுத்தப்பட்டோருக்காகவும் அர்பணித்த பெருந் தலைவரை நாம் இழந்துவிட்டோம்.

அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல விஷயங்கள் குறித்து பேசக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது.  கொள்கை சார்ந்த அவரது புரிதல் மற்றும் சமூக நலத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்த அவரது பார்வை ஆகியவற்றை அவரிடம் அறிந்துகொண்டேன். ஜனநாயகக் கோட்பாடுகளை உறுதியுடன் கடைபிடுத்தவர், அவசர காலகட்டத்தில் வலுவான எதிர்ப்பை பதிவு செய்தவர் அவர். " என்று பிரதமர் உணர்வுபூர்வ புகழஞ்சலியை வெளியிட்டுள்ளார். 

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது, “திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close