வெள்ளம் புகும் அபாயகர பாலம்....  நூலிழையில் குழந்தையை மீட்ட பேரிடர் வீரர்- வைரல் காட்சி!

  Padmapriya   | Last Modified : 12 Aug, 2018 09:38 pm
man-who-ran-across-sinking-bridge-with-child-is-hero-for-flood-hit-kerala

கேரளாவில் செருந்தோனி என்ற பாலம் இடிந்து விழ இருந்த நொடிப்பொழுதில் எதிர்புறத்தில் இருந்தக் குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பேரிடர் மீட்புக்குழு வீரர் பலரின் பாராட்டினை பெற்று வருகிறார். 

கேரளாவை தென்மேற்கு பருவ மழை புரட்டிபோட்டு வருகிறது. தாழ்வான பகுதிகள் முற்றிலும் நீர்நிலைகளை போல காட்சியளிக்கின்றன. 7 மாவட்டங்கள் வெள்ளக்காடாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகள் இல்லாத மழைப் பொழிவு அங்கு இருந்து வருகிறது. 

அபாயகர அளவை எட்டிய இடுக்கி அணையின் அனைத்து மதகுகளும் வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டன. இந்த நிலையில் இடுக்கி அணை அருகே உள்ள செருந்தோனி பாலத்தின் மறுமுனையில் ஒருவர் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார். அடுத்த சில நொடிகளில் வெள்ள நீர் புகுந்து பாலம் உடையும் நிலையில் நிர்கதியாய் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். 

அப்போது பேரிடர் மேலாண்மை படை வீரர் கன்ஹையா என்றவர் சற்றும் தாமதிக்காமல் குழந்தையை கையில் ஏந்தி பாலத்தின் மறுமுனைக்கு ஓடினார். அவர் பின் குழந்தையின் தந்தையும் பின்தொடர்ந்தார் . 

அடுத்த சில நொடிகளில் அந்த பாலமே உடைந்து கீழே விழுந்தது. இந்த மீட்புக் காட்சிகளை தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் படமெடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரளாகி வருகின்றன. பலரும் பேரிடர் மீட்புக் குழுவையும் வீரர் கன்ஹையாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

இது குறித்து கூறியுள்ள கன்ஹையா, அவர் பாலத்தை கடக்க குழந்தையுடன் பயத்தில் நின்றுகொண்டிருந்தார். உடனடியாக உதவினேன். இதுப் பெரிய விஷயமே இல்லை. இது போன்ற பாதிப்புகளிலிருந்து பலமுறை மீட்பு பணிகளை செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். 

வீரர் கன்ஹையா, பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னை அரக்கோணம் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் பயின்று தமிழகம், மேற்கு வங்கம், ஆந்திரா போன்ற இடங்களில் பேரிடர் சமயத்தில் பணி செய்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close