கேரளா: சேதம் அடைந்த பாஸ்போர்ட்டுகள் கட்டணம் இன்றி மாற்றி தர முடிவு 

  சுஜாதா   | Last Modified : 13 Aug, 2018 08:11 am
passports-damaged-in-floods-will-be-replaced-free-of-cost

கேரளா கன மழையால் சேதம் அடைந்த பாஸ்போர்ட்டுகள் கட்டணம் இன்றி மாற்றி தரப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.

கேரளாவில், வரலாறு காணாத மழை  கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை  37 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ்போர்ட்டுகளை கட்டணம் ஏதுமின்றி மாற்றி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக  தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் கூறி உள்ளார். பாஸ்போர்ட் சேதம் அடைந்தவர்கள், சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close