கேரளா நிவாரண பணிக்காக 100 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு 

  சுஜாதா   | Last Modified : 13 Aug, 2018 08:30 am
centre-announces-relief-worth-rs-100-crores

கேரளா நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த  பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் உடன் சென்றனர். சேதம் குறித்த விவரங்களை கேட்டறிந்த  உள்துறை அமைச்சர், கேரளாவுக்கு உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கேரளாவில்  மழை வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். நிவாரண நிதியாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய கேரள அரசு கோரியுள்ளது. மத்திய குழு பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட கால தாமதம் ஆகும் என்பதால் உடனடியாக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது’’ எனக் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close