28ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை: தேர்வுகள் ரத்து

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2018 08:49 am
holiday-announced-till-28th-of-this-month-in-kerala

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலம் முழுவதும் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் அங்கு வரும் 28ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத கனமழை பொழிந்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் இருக்கும் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மத்திய ராணுவப்படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் அங்கு வரும் 28ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்று வரை நடக்கவிருந்த  அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் தேர்வு நடக்கவிருக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close