கேரளாவுக்கு உதவ மேலும் 4 கப்பல் கொச்சி வந்தது!

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2018 11:55 am

4-capital-ships-of-indian-coast-guard-have-reached-kochi

கேரளாவை கன மழை புரட்டிப்போட்டுள்ளது. சோஷியல் மீடியாவில் வெளியாகும் படங்கள் பார்ப்போரை பதற வைக்கிறது. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலரும் மீட்புக்காக காத்திருக்கின்றனர். கைக் குழந்தையுடன் குடும்பத்துடன் கெஞ்சும் வீடியோ நெஞ்சை உருக்குகிறது.

 

 

இந்தநிலையில், கேரளாவில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் இந்திய கடலோர பாதுகாப்புப் படையின் நான்கு கப்பல்கள் கொச்சி விரைந்துள்ளன. மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு இந்த கப்பல் உதவிகளை வழங்கும். மொத்தம் 24 மீட்புக் குழுவினர் இந்தப் பணிக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கடலோர பாதுகாப்புப் படையின் மீட்பு நடவடிக்கையின் மூலம் மட்டும் 1764 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4688 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close